பூஜை புகைப்படங்களை வெளியிட்ட ரஜினி படக்குழு

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ளனர்.
பூஜை புகைப்படங்களை வெளியிட்ட ரஜினி படக்குழு
Published on

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், பூஜை தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. நியூ லுக்கில் ரஜினி இருக்கும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com