படப்பிடிப்பிற்காக மும்பை செல்லும் ரஜினி

நடிகர் ரஜினியின் 170-வது படத்தை ஞானவேல் இயக்குகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பிற்காக மும்பை செல்லும் ரஜினி
Published on

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் நெல்லை பகுதியில் நடைபெற்றது.

இந்நிலையில் 'தலைவர் 170' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது என்றும் இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் நாளை மும்பை செல்லவுள்ளதாகவும் அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com