ராகவா லாரன்ஸை வைத்து படம் இயக்கும் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள்

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸின் துர்கா திரைப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள் இயக்கபோவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
துர்கா
துர்கா
Published on

தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2ம் பாகம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கடந்த ஆண்டு புதிய படம் ஒன்றின் அறிவிப்பை வெளியானது. 'துர்கா' எனப் தலைப்பிடப்பட்ட அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தார். முதலில் இப்படத்தை ராகவா லாரன்ஸே இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்களான அன்பறிவ் இயக்கவுள்ளதாக லாரன்ஸ் உறுதி செய்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் - அன்பறிவ்

இதற்கு முன்பு இவர்கள் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘24’, ‘கைதி’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். கே.ஜி.எப்’ படத்துக்காக சிறந்த ஸ்டன்ட் இயக்குனர்களுக்கான தேசிய விருது இவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’, கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ ஆகிய படங்களில் பணிபுரிந்து வருது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழிநுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com