கையில் சிகரெட்டுடன் ராய் லட்சுமி.. வைரலாகும் புகைப்படம்..

ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ராய் லட்சுமி.ராய் லட்சுமி தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ராய் லட்சுமி
ராய் லட்சுமி
Published on: 

தமிழில் 'கற்க கசடற' படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

அதன்பிறகு 'கற்க கசடற', 'குண்டக்க மண்டக்க', 'தர்மபுரி', 'வெள்ளித்திரை', 'மங்காத்த', 'காஞ்சனா', 'அரண்மனை' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.

படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த 'ஜூலி-2' திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை ராய் லட்சுமி வெளியிட்டு வருகிறார்.

ராய் லட்சுமி

தற்போது கையில் சிகரெட்டுடன் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நம்ம மாஸ் ஸ்டையில் செய்யும் போது அதை ஏன் வேறு வழியில் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com