திருமணம் செய்யும் எண்ணமில்லை - பிரேம்ஜி

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி, தனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
பிரேம்ஜி
பிரேம்ஜி
Published on

பிரபல இசை அமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி அமரன். இவர் தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 

இவருக்கும், ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி உட்பட பல படங்களில் பின்னணி பாடியுள்ள வினய்தாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இதை நடிகர் பிரேம்ஜி அமரன் மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "எனக்குத் திருமணம் செய்யும் எண்ணமில்லை. இருந்திருந்தால் 10 வருடத்துக்கு முன்பே திருமணம் செய்திருப்பேன். என் வாழ்வில் திருமணம், குழந்தைகள் போன்ற விஷயங்கள் கிடையாது. அதில் நான் தெளிவாக இருக்கிறேன்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com