ஜி.வி. பிரகாஷ் பட இயக்குனர் மணி நாகராஜ் காலமானார்

பென்சில் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணி நாகராஜ்.இவர் மாரடைப்பால் இன்று காலமானார்
மணி நாகராஜ்
மணி நாகராஜ்
Published on

இயக்குனர் கெளதம் மேனனிடம் இணை இயக்குனராக இருந்த மணி நாகராஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான "பென்சில்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, ஊர்வசி, விடிவி கணேஷ், டிபி கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

பென்சில் - மணி நாகராஜ்

இதையடுத்து கோபிநாத், சீதா, அனிகா சுரேந்திரன், வனிதா விஜய்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் "வாசுவின் கர்ப்பிணிகள்" படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில் இயக்குனர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக இன்று (25-08-2022) காலமானார்.

இவரின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் இயக்குனர் மணி நாகராஜ் மறைவிற்கு சமூக வலைத்தளத்தின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com