கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் அதர்வா படக்குழு

இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள திரைப்படம் ‘பட்டத்து அரசன்’.’பட்டத்து அரசன்’ திரைப்படம் நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அதர்வா
அதர்வா
Published on

2010-ஆம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த 'பரதேசி', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 'குறுதி ஆட்டம்', 'டிரிக்கர்' போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

பட்டத்து அரசன்

இவர் தற்போது 'களவாணி', 'வாகை சூடவா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் 'பட்டத்து அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

பட்டத்து அரசன்

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, நடிகை ராதிகா, விஜயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 'பட்டத்து அரசன்' திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com