அதிரடி காட்டும் பதான்: ஷாருக்கான் வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த திரைப்படம் ‘பதான்’.இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.402 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பதான்
பதான்
Published on

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பதான்

'பதான்' திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.402 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மும்பையின் மன்னாட் பகுதியில் உள்ள ஷாருக்கானின் வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் நேற்று மாலை குவிந்தனர்.

ஷாருக்கான்

அப்போது, ஷாருக்கான் வீட்டின் பால்கனியிலிருந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து பறக்கும் முத்தத்தை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோவை இவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com