எனக்கு புத்துயிர் பிறந்ததே இன்றுதான் - பார்த்திபன் நெகிழ்ச்சி

பார்த்திபன் ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பார்த்திபன்
பார்த்திபன்
Published on

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பார்த்திபன்

இந்நிலையில், இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "புத்தாண்டு வாழ்த்துகள் எனக்கான உங்களுக்கு!ஆனால், புத்துயிர் பிறந்ததே இன்று(14/04/1989)தான் 'உங்கள் பார்த்திபனா'ன எனக்கு! விடியாத பொழுதுகளாய்,பொழுதுகள் விடிந்துக் கொண்டிருந்த அப்பொழுதுகளில்,நல்வாழ்வின் விடியல் பொழுதாய் மலர்ந்தது இப்பொழுது அப்பொழுது மறக்க முடியாத நாள் என் வாழ்வில்" என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com