குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் வியூஸ் - வைரலாகும் கங்குவா டீசர்

வி.எஃப்.எக்ஸ். வேலைகளுக்காக பாராட்டுகளை பெற்றது. பாபி தியோல் இந்த படத்தில் நடித்துள்ளார்.
குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் வியூஸ் - வைரலாகும் கங்குவா டீசர்
Published on

தமிழ் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நடிகர் சூர்யாவின் கங்குவா டீசர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி- பிரமோத் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இயக்குநர் சிவா இயக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்த டீசர் மேக்கிங் மற்றும் வி.எஃப்.எக்ஸ். வேலைகளுக்காக பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அனிமல் படத்தின் வெற்றி மூலம் அனைவரையும் ஈர்த்த நடிகர் பாபி தியோல் இந்த படத்தில் நடித்துள்ளார். கங்குவா டீசர் வெளியான குறுகிய காலத்தில் 1.8 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்த படத்திற்கு மிலன் கலை இயக்குநராகவும், நிஷாத் யூசுப் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். சுப்ரீம் சுந்தர் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். எழுத்தாளர் ஆதி நாராயணாவுடன் இணைந்து மதன் கார்க்கி இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com