"பைரவா"வாக பிரபாஸ் - வைரலாகும் கல்கி படத்தின் புது போஸ்டர்

பாடல் படப்பிடிப்புக்காக இத்தாலிக்குச் சென்றிருந்தனர். போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
"பைரவா"வாக பிரபாஸ் - வைரலாகும் கல்கி படத்தின் புது போஸ்டர்
Published on

நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகும் 'கல்கி 2898 A.D' படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

கல்கி 2898 A.D. படத்தில் 'பைரவா' என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ். பைரவா குறித்த புது போஸ்டர் மூலம் படக்குழு சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில்தான் நடிகர் பிரபாஸ், நடிகை திஷா பதானி, இயக்குநர் நாக் அஸ்வின் மற்றும் தயாரிப்பாளர் பிரியங்கா தத் ஆகியோர் இப்படத்தின் ஒரு பாடலைப் படமாக்க இத்தாலிக்குச் சென்றிருந்தனர்.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் கல்கி 2898 AD படம், பல மொழிகளில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது. இது புராணக் கதைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்சன் கதையாகும்.

இந்த படம் மே 9-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com