இங்க நான் தான் கிங்கு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

வடக்குப்பட்டி ராமசாமி மக்களிடம் நல்ல வரவேற்பை பெர்றது.ஆனந்த் நாராயண் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இங்க நான் தான் கிங்கு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
Published on

காமெடியனாக இருந்து நடிகர்களாய் மாறியவர்களில் சந்தானம் ஒருவர். அவர் நடிக்கும் படங்களில் நகைச்சுவை பானியிலும், மற்றவர்களை கலாய்க்கும் பானியிலும் தன் நடிப்பை வெளிப்படுத்துவார். இந்த ஆண்டு அவர் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படம் ரிலீசானது.

வடக்குப்பட்டி ராமசாமி மக்களிடம் நல்ல வரவேற்பை பெர்றது. நல்ல நகைச்சுவை திரைப்படமாக சந்தானத்த்ற்கு அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து "இங்க நான் தான் கிங்கு" என்ற படத்தில் சந்தானம் நடித்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் "மாயோனே" தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. இமான் இசையமைத்துள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

ஆனந்த் நாராயண் இப்படத்தை இயக்கியுள்ளார். எழிச்சுர் அரவிந்தன் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். கோபுரம் பிலிம் ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது. தம்பி ராம்மையா , மனோபாலா,முனிஸ்காந்த், பால சரவணன் போன்ற பலர் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். பிரியாலயா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com