அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் கலகலப்பான கதை.. வைரலாகும் டபுள் டக்கர் டீசர்..

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் கலகலப்பான கதை.. வைரலாகும் டபுள் டக்கர் டீசர்..
Published on

90-ஸ் மற்றும் 2000-வது காலகட்டங்களில் வெளியான ஜெய்ஹிந்த், கில்லி, தூள், ரன், சந்திரமுகி, அன்பே சிவம், இயற்கை, சுள்ளான், வில்லன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

படங்களின் வெற்றி தோல்வியை கடந்து இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் அனைத்தும் நிச்சயம் ஹிட் அடிக்கும். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

மகதி இயக்கத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட் முதன்மை வேடங்களில் நடித்துள்ள புதிய படம் 'டபுள் டக்கர்.' இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா, யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், முனிஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவில் முதல் முறையாக அனிமேஷன் கதாபாத்திரங்கள் கொண்ட படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட சில அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டீசர் யூடியூபில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com