அஜித் முதல் அல்லு அர்ஜூன் வரை - முன்னணி படங்களுக்கு இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்

பிரம்மாண்ட படைப்புகளாக இவை தயாராகி வருகின்றன.பல படங்களுக்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
அஜித் முதல் அல்லு அர்ஜூன் வரை - முன்னணி படங்களுக்கு இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்
Published on

ரசிகர்களால் டி.எஸ்.பி. என்று அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத். அதிரடி மற்றும் ஆத்மார்த்த இசையால் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே இவர் ஈர்த்து வருகிறார்.

தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் உருவான 'புஷ்பா' திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ஒரே சமயத்தில் ஐந்து மொழிகளில் ஹிட் அடித்தது. இந்நிலையில், ஐந்து முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது இசையமைத்து வருகிறார்.

அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி', சூர்யா நடிக்கும் 'கங்குவா', தனுஷ் நடிப்பில் உருவாகும் 'குபேரா', விஷால் நடிக்கும் 'ரத்னம்', மற்றும் 'புஷ்பா 2' என்று தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசை ஆதிக்கம் நீண்டு கொண்டே செல்கிறது.

மேற்கண்ட ஐந்து திரைப்படங்களும் பிரபல இயக்குநர்கள், முன்னணி தயாரிப்பு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. வித்தியாசமான கதைக் களங்களோடு பன்மொழிகளில் பிரம்மாண்ட படைப்புகளாக இவை தயாராகி வருகின்றன.

இந்து ஐந்து படங்கள் தவிர பவன் கல்யாண் நடிப்பில் 'ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'உஸ்தாத் பகத்சிங்', நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'தாண்டேல்', புதுமுகங்கள் நடிக்கும் 'ஜூனியர்' உள்ளிட்ட மேலும் பல திரைப்படங்களுக்கும் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com