பத்ம விபூஷண் விருது பெற்ற சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா

சிரஞ்சீவி பல படங்களில் நடித்து வருகிறார். சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
பத்ம விபூஷண் விருது பெற்ற சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா
Published on

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் வெற்றி பயணத்தை தொடர்ந்து வரும் சிரஞ்சீவி இப்போதும் சீரான இடைவெளிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் திரையுலகுக்கு அவர் ஆற்றிய கலை சேவைக்காகவும் அவர் செய்துள்ள, சாதனைகளுக்காகவும் அவருக்கு நமது நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவியை கவுரவிக்கும் விதமாக மிக பிரம்மாண்ட விழா ஒன்றை அமெரிக்காவில் உள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ரசிகர்கள் நடத்தினர். அமெரிக்காவின் கலிபோர்னியா டானா பாயிண்ட்டில் உள்ள ரிட்ஸ் கேரிட்டானில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் ஆயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிரஞ்சீவி மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வின் போது பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com