கதாநாயகனாக அறிமுகமாகும் இயக்குநர் விக்ரமனின் மகன் - வாழ்த்த குவிந்த பிரபலங்கள்

விக்ரமன் மகன் அறிமுகமாகும் படத்தை கே.எஸ். ரவிக்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் சூர்ய கதிர் இயக்கியுள்ளார்.
கதாநாயகனாக அறிமுகமாகும் இயக்குநர் விக்ரமனின் மகன் - வாழ்த்த குவிந்த பிரபலங்கள்
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் விக்ரமன். தமிழில் இவர் இயக்கத்தில் வெளியான புது வசந்தம், பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் "ஹிட் லிஸ்ட்". கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்ய கதிர் இயக்குகிறார். இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, பொன்ராம், மித்ரன் ஆர் ஜவஹர், கார்த்திக் சுப்பராஜ், சிறுத்தை சிவா, பேரரசு, கதிர், சரண், எழில், இராஜ குமாரன், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின், ஆர்.வி. உதயகுமார், பி. வாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இயக்குநர் மற்றும் நடிகர்களான சந்தான பாரதி, பார்த்திபன், பாக்யராஜ், ரமேஷ் கண்ணா, நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ஜெயம் ரவி, நடிகரும், தயாரிப்பாளருமான ஜெயபிரகாஷ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, டி. சிவா, சுரேஷ் காமாட்சி, தனஞ்ஜெயன் ஆகியோரும் கலந்து கொண்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com