இதுவொரு வாய்ப்பு, விட்டுட கூடாது - கவனம் ஈர்க்கும் புளூ ஸ்டார் டிரைலர்

புளூ ஸ்டார் படத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இதுவொரு வாய்ப்பு, விட்டுட கூடாது - கவனம் ஈர்க்கும் புளூ ஸ்டார் டிரைலர்
Published on

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், புளூ ஸ்டார் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com