நாய் சேகர் படத்தின் டீசர்

கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ், பவித்ரா லட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் நாய் சேகர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நாய் சேகர் படத்தில் சதீஷ் - பவித்ரா லட்சுமி
நாய் சேகர் படத்தில் சதீஷ் - பவித்ரா லட்சுமி
Published on

பிகில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் நாய் சேகர். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்க, பிரவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜீஷ் அசோக் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது புத்தாண்டை முன்னிட்டு நாய் சேகர் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com