இசையமைப்பாளராக மாறும் மிஷ்கின்.. பாடல்கள் விரைவில் வெளியீடு..

ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'டெவில்'.இந்த திரைப்படத்தில் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மிஷ்கின்
மிஷ்கின்
Published on

'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.

மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொள்கிறார்கள்.

டெவில் படக்குழு

தமிழின் மிக முக்கியமான இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக  "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மேலும், "டெவில்" திரைப்படத்திற்கு நான்கு பாடல்களை கொடுத்துள்ளார். இந்த பாடல்களை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com