'மை3' வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘மை3’.'மை3’ வெப்தொடருக்கு கணேசன் இசையமைத்துள்ளார்.
'மை3' வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் 'மை3'. இந்த தொடரில் ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜனனி, ஆஷ்னா ஜவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முகேன், ஒரு பணக்கார பிஸினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகி, தீவிரமாக பாதிப்புகுள்ளாகிவிடுவார். இளம் விஞ்ஞானியாக வரும் சாந்தனுவால் உருவாக்கப்பட்ட, மை3  என்ற மனித உருவ ரோபோவை வாங்க ஆர்வமாக இருக்கிறார். ஆனால் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட சிக்கலில் செயலிழந்து போன மை3 ரோபோவிற்கு பதிலாக  சாந்தனுவின் உண்மையான முன்னாள் காதலி ஹன்சிகாவை அவரிடம் அனுப்புகிறார். முகேனை, ஹன்சிகா சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பது தான் இந்தக்கதை.

மை3 போஸ்டர்

ரொமாண்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'மை3' வெப்தொடரை Trendloud நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடருக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய கணேசன் இசையமைத்துள்ளார். 'மை3' வெப்தொடர் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com