இணையத் தொடரில் மகத் ராகவேந்திரா

மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்த மகத் ராகவேந்திரா தற்போது இணைய தொடரில் நடித்துள்ளார்.
மஹத் ராகவேந்திரா
மஹத் ராகவேந்திரா
Published on

விஜய்யுடன் ஜில்லா, அஜித்குமாருடன் மங்காத்தா படங்களில் நடித்து பிரபலமானவர் மகத். பிரியாணி, வடகறி, சென்னை-28 இரண்டாம் பாகம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது ஈமோஜி என்ற வெப்தொடரில் நடித்துள்ளார். 

ஈமோஜி தொடர்

இதில் மகத் ராகவேந்திரா கதாநாயகனாகவும், தேவிகா சதீஷ் கதாநாயகியாகவும் நடிக்க, இத்தொடரில் மானசா மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த ஈமோஜி தொடரை சென்.எஸ்.ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார். இருவர் ஒன்றானால் மற்றும் பொற்காலம் படங்களை தயாரித்த எ.எம்.சம்பத் இதனை தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஜலந்தர் வாசன், கலை இயக்குனராக வனராஜ், இசையமைப்பாளராக ஆர்.எச்.விக்ரம், படத்தொகுப்பாளராக எம்.ஆர்.ரெஜீஷ் பணியாற்றியுள்ளனர்.

ஈமோஜி தொடர்

தென்காசி, நாகர்கோவில், ஹைதராபாத் மற்றும் கேரள வனப்பகுதிகளிலும் இந்த தொடர் படமாக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com