லோகேஷ் கனகராஜ் வழங்கும் முதல் படத்திற்கு இப்படி ஒரு தணிக்கை சான்றிதழா?

'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.
லோகேஷ் கனகராஜ் வழங்கும் முதல் படத்திற்கு இப்படி ஒரு தணிக்கை சான்றிதழா?
Published on

அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

பைட் கிளப் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'பைட் கிளப்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதற்கு லோகேஷ் கனகராஜ் வழங்கும் முதல் படத்திற்கே 'ஏ'சான்றிதழா? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com