அமீர்கான் படத்திற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ரிவ்யூ

இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ள படம் லால் சிங் சத்தா.இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
Published on

ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில், கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்தை தழுவி தற்போது பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

லால் சிங் சத்தா

இதில் இந்தி நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லால் சிங் சத்தா

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் முன்னோட்ட காட்சியில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, "அன்பு, காதல், மனிதநேயம் அனைத்தும் பேசும் படமாக "லால் சிங் சத்தா" அமைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் இந்த மாதிரியான ஒரு படம் அவசியம்.

எப்போது எல்லாம் நாம் மோசமாக உணர்கிறோமோ அப்போது நம்மை ஊக்கப்படுத்த பார்க்கும் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். அமீர்கான் சார் நீங்கள் கிரேட்" என்று பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com