அதர்வா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'.இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
குருதி ஆட்டம்
குருதி ஆட்டம்
Published on

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்த படம் 'குருதி ஆட்டம்'. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

குருதி ஆட்டம்

இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்ததை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து 'குருதி ஆட்டம்' திரைப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி  "ஆஹா'' ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com