ரசிகர்கள் கொண்டாடும் கே.ஜி.எப்-2 பாடல்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ’கே.ஜி.எப்-2' படத்தின் புதிய பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
கே.ஜி.எப்-2
கே.ஜி.எப்-2
Published on

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கே.ஜி.எப்-2

இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அகிலம் நீ என்று தொடங்கும் அம்மா பாடல் தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com