கவனம் ஈர்க்கும் ஆர்யா படத்தின் இரண்டாவது பாடல்

முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
Published on

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'கறிகொழம்பு வாசம்' பாடல் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com