search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
    X

    காசேதான் கடவுளடா

    மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்

    • இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ள படம் காசேதான் கடவுளடா.
    • இப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

    சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் 'காசேதான் கடவுளடா'. தற்போது இப்படத்தை ரீமேக் செய்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.


    காசேதான் கடவுளடா படக்குழு

    இதில் யோகிபாபு, சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    காசேதான் கடவுளடா படக்குழு

    அதன்படி, 'காசேதான் கடவுளடா' படத்தின் ப்ரோமோ பாடலை படக்குழுவினர் முடித்துள்ளனர். இதனை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. 'காசேதான் கடவுளடா' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×