காசேதான் கடவுளடா படத்தின் புதிய அப்டேட்

இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ள படம் காசேதான் கடவுளடா.இப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.
காசேதான் கடவுளடா
காசேதான் கடவுளடா
Published on

சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் 'காசேதான் கடவுளடா'. தற்போது இப்படத்தை ரீமேக் செய்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதில் யோகிபாபு, சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா நடித்துள்ளார். ஏற்கனவே வணக்கம் சென்னை மற்றும் சுமோ ஆகிய படங்களில் சிவாவுடன் இணைந்து பணியாற்றியுள்ள பிரியா ஆனந்த், தற்போது 3-வது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'காசேதான் கடவுளடா' படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை  ஈர்த்து வருகிறது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com