'இந்தியன்' என்பதில் பெருமிதம் கொள்வோம் - சங்கருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் 'இந்தியன் 2'.இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளது.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக ஷங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது.

பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. 'விக்ரம்' பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்' என தெரிவித்திருந்தார். சமீபத்தில் இப்படத்தில் மீண்டும் நடிப்பதை நடிகை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தினார்.

இந்தியன் 2

இந்நிலையில், இன்று (17-08-2022) இயக்குனர் சங்கர் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நடிகர் கமல்ஹாசன், ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், "'இந்தியன்' என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் சங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் 2

இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் சங்கர், "நிச்சயமாக 'இந்தியரே'. என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து மிக்க நன்றி கமல்ஹாசன் சார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com