மீண்டும் வெளியாகும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படம்

முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
மீண்டும் வெளியாகும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படம்
Published on

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் பிரபு, கே.பாக்யராஜ், மாஸ்டர் மகேந்திரன், பி.எஸ்.அவினாஷ், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ரேணுகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஜூலை 7ம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com