ரஜினியுடன் இணைந்த தமன்னா.. ஜெயிலர் கலக்கல் அப்டேட்..

ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் மோகன்லால் மற்றும் சுனில் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ஜெயிலர்
ஜெயிலர்
Published on: 

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயிலர்

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாக சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை தமன்னா இணைந்துள்ளார். இதனை படக்குழு புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com