கணவன்- மனைவி சண்ட போட காரணம் இருக்கணும்னு அவசியம் இல்ல.. இறுகப்பற்று டிரைலர் வைரல்

விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'.இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.
கணவன்- மனைவி சண்ட போட காரணம் இருக்கணும்னு அவசியம் இல்ல.. இறுகப்பற்று டிரைலர் வைரல்
Published on

இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கணவன் - மனைவி உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com