தப்பு பண்ணும் போது ஆண்டவன் பாத்துப்பானு விட்டுபோற அளவுக்கு பொறும இல்ல- இறைவன் டிரைலர்

ஜெயம் ரவி- நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் ‘இறைவன்’.இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தப்பு பண்ணும் போது ஆண்டவன் பாத்துப்பானு விட்டுபோற அளவுக்கு பொறும இல்ல- இறைவன் டிரைலர்
Published on

'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், 'இறைவன்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 'தப்பு பண்ணும் போது ஆண்டவன் பாத்துப்பானு விட்டுபோற அளவுக்கு பொறும இல்ல' போன்ற வசனங்களுடன் த்ரில்லர் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், 'இறைவன்' டிரைலர் ஒரே நாளில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

'இறைவன்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com