'இடிமுழக்கம்' படத்தின் போஸ்டரை வெளியிட்ட சீனு ராமசாமி

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இடிமுழக்கம்’.இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சீனு ராமசாமி
சீனு ராமசாமி
Published on

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'இடிமுழக்கம்'. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இடிமுழக்கம்
இடிமுழக்கம்

இடிமுழக்கம்

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் பிறந்த நாளான இன்று இப்படத்தின் போஸ்டரை இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் எங்கள் ஜல்லிக்கட்டுக்கு துள்ளி வந்து குரல் கொடுத்த வெற்றித்தமிழன் ஜிவி பிரகாஷுக்கு இடிமுழக்கம் படக்குழுவின் சார்பில் அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com