இணையத்தில் ட்ரெண்டாகும் 'ஹாய் நான்னா' டீசர்

நானி நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய் நான்னா’.இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
இணையத்தில் ட்ரெண்டாகும் 'ஹாய் நான்னா' டீசர்
Published on

இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

ஹாய் நான்னா போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

X

Maalai Malar
www.maalaimalar.com