புதிய போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'ஹனு மான்' படக்குழு

தேஜா சஜ்ஜா நடித்துள்ள திரைப்படம் 'ஹனு-மான்'.இப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
புதிய போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'ஹனு மான்' படக்குழு
Published on

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார். இப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹனு-மான் போஸ்டர்

இந்நிலையில், 'ஹனுமான்' பட தயாரிப்பு நிறுவனம் ரசிகர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பண்டிகை கொண்டாட்டமாக ஒரு கச்சிதமான போஸ்டரை வெளியிட்டு, படத்திற்கான விளம்பரங்களைத் தொடங்கியுள்ளனர். இந்த போஸ்டரில் தேஜா சஜ்ஜா ஒரு மாறுபட்ட பாரம்பரிய அவதாரத்தில் தோன்றியுள்ளார். மேலும் அவர் விநாயகர் சதுர்த்தி விழாவை, ஒரு பெரிய கூட்டத்துடன் கொண்டாடுகிறார். இந்த போஸ்டரை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com