இயக்குனர் எச். வினோத்துடன் இணையும் கமல்ஹாசன்?

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ஏகே 61.இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
எச். வினோத் - கமல்ஹாசன்
எச். வினோத் - கமல்ஹாசன்
Published on

வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, வீரா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

அஜித்குமார்

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் எச். வினோத்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இயக்குனர் எச். வினோத் அடுத்தாக கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏகே 61 படத்தின் பணிகள் முடிந்த பிறகு இவர் கமல் படத்தில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இப்படத்தில் கமல் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com