வைரலாகும் நயன்தாரா படத்தின் போஸ்டர்

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் காட்ஃபாதர்.இப்படம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்.
நயன்தாரா
நயன்தாரா
Published on

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார்.

காட்ஃபாதர்

இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

காட்ஃபாதர்

இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, 'காட்ஃபாதர்' படத்தில் நடிகை நயன்தாரா, சத்யபிரியா ஜெய்தேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், இப்படம் ஆக்டோபர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com