யாரும் காணாத விண்மீனே- கவனம் ஈர்க்கும் பைட் கிளப் பாடல்

'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்பம் 'பைட் கிளப்' .'பைட் கிளப்' திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
யாரும் காணாத விண்மீனே- கவனம் ஈர்க்கும் பைட் கிளப் பாடல்
Published on

அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், 'பைட் கிளப்' (Fight Club) திரைப்படத்தின் முதல் பாடலான 'யாரும் காணாத' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 'பைட் கிளப்' (Fight Club) திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com