இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் பிரபல நடிகர்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் 'இந்தியன் 2'.இப்படத்தில் மீண்டும் நடிப்பதாக நடிகை காஜல் அகர்வால் சில தினங்களுக்கு முன்பு உறுதிப்படுத்தினார்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக ஷங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் ஷங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர். 'விக்ரம்' பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்' என தெரிவித்திருந்தார்.

இந்தியன் 2
இந்தியன் 2

இந்தியன் 2

இந்த படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி விட்டதாக கூறப்பட்டது. இதனை காஜல் அகர்வால் மறுத்து, படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது என்றும் தெரிவித்தார்.

கார்த்திக்
கார்த்திக்

கார்த்திக்

இந்த நிலையில் இந்தியன்-2 படத்தில் நடிக்கவிருக்கும் முக்கிய நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக் இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சமீபகாலமாக படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com