சூர்யா 42-ல் இணையும் துல்கர் சல்மான் பட நடிகை.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

சூர்யாவின் 42-வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சூர்யா 42
சூர்யா 42
Published on

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா 42 படக்குழு

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

மிருணாள் தாகூர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகவுள்ளது. அதன்படி, சூர்யா 42 படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிகளில் நடிகை மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவி வருகிறது. இந்த தகவலால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com