வசந்தபாலன் இயக்கிய குறும்படம்.. பாராட்டும் ரசிகர்கள்

தமிழ் திரையுலகிற்கு தன்னுடைய படைப்பின் வாயிலாக பல படங்களை அள்ளித்தந்த இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய குறும்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
வசந்தபாலன்
வசந்தபாலன்
Published on

வெயில், அங்காடித் தெரு, அரவாண், காவிய தலைவன், ஜெயில் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் தற்போது தலைவன் என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அடிப்படையாக வைத்து எளிதில் மக்களுக்கு இந்த திட்டத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வெளியீட்டு விழா

தயாரிப்பாளர்கள் டி.சிவா மற்றும் சிங்கார வடிவேலன் இருவரும் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள

 தலைவன் என்கிற பாடலை தயாரிப்பாளர் சிவா எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு அம்ரீஷ் இசையமைக்க, தினேஷ் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார். இதன் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. திரைத்துறையினர், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டு இதனை வெளியிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com