பெற்றோர் எனும் பயணத்தை தொடங்குகிறோம்.. குட் நியூஸ் சொன்ன அட்லீ -பிரியா தம்பதியினர்..

இயக்குனர் அட்லி நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.நடிகை பிரியா கர்ப்பமாக இருப்பதாக அட்லீ சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
அட்லீ -பிரியா
அட்லீ -பிரியா
Published on

தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அட்லீ- பிரியா

இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது நடிகை பிரியா கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்த அட்லீ இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

அட்லீ -பிரியா

இந்நிலையில், இயக்குனர் அட்லீ - பிரியா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ள அட்லீ, "எல்லோரும் சொன்னது சரிதான். இப்படி ஓர் உணர்வு உலகில் இல்லை. அது போலவே இப்போது எங்களது மகன் இங்கு உள்ளார். பெற்றோர் எனும் பயணத்தை நாங்கள் இனிதே இன்று தொடங்குகிறோம்" என பதிவிட்டுள்ளார். இந்த தம்பதியருக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com