இதுல வேற மாதிரியான மாரியம்மா.. மனம் திறந்த துஷாரா விஜயன்

நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது "அநீதி" திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு மாலைமலருக்கு பிரத்யேக பேட்டியளித்தனர்.
இதுல வேற மாதிரியான மாரியம்மா.. மனம் திறந்த துஷாரா விஜயன்
Published on

இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "அநீதி". இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றது. இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் புரொமோஷனுக்காக மாலைமலருக்கு அநீதி படக்குழு சிறப்பு பேட்டியளித்தனர். அப்போது நடிகை துஷாரா விஜயனிடம் சார்ப்பட்டா பரம்பரை மாரியம்மா இந்த படத்துல எந்த மாதிரியான ரோல் பண்ணிருக்காங்க என்று கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த துஷாரா விஜயன், வேற மாரியா ஒன்னு பண்ணியிருக்கேன். நான் பண்ண கதாப்பாத்திரத்துலயே இது ரொம்ப வித்யாசமான கதாப்பாத்திரம். இந்த படம் ஒரு வித்யாசமான கேரக்டரா வந்திருக்கு என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com