நடனக் கலைஞர்களை கவுரவிக்கும் பிரமாண்ட "டான்ஸ் டான்" விழா

டான்ஸ் டான் விழா டிசம்பர் மாதம் 30- ஆம் தேதி நடைபெறவுள்ளது.நடனக் கலைஞர் ஶ்ரீதர் மாஸ்டர் தலைமையில் எண்ணற்ற திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
நடனக் கலைஞர்களை கவுரவிக்கும் பிரமாண்ட "டான்ஸ் டான்" விழா
Published on

தமிழ் சினிமாவில்  கோலோச்சி நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும் அவர்களை கவுரவிக்கும் Dance Don Guru Steps 2003 Kollywood Awards விழா டிசம்பர் மாதம் 30- ஆம் தேதி, காமராஜர் அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடனக் கலைஞர் ஶ்ரீதர் மாஸ்டர் தலைமையில் எண்ணற்ற திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த டான்ஸ் டான் விழாவை அறிவிப்பதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ,ஶ்ரீதர் மாஸ்டர்,  அக்ஷரா ஶ்ரீதர், அசோக் மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர், லலிதா மணி மாஸ்டர், குமார் சாந்தி மாஸ்டர், வசந்த் மாஸ்டர், விமலா மாஸ்டர், சம்பத் மாஸ்டர், ஹரீஷ் குமார் மாஸ்டர், மாலினி மாஸ்டர், DKS பாபு மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1950- களில் துவங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த்திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். இன்றைய நவீன டிஜிட்டல் உலகைப் போல அவர்களைப் பற்றிய அறிமுகங்களோ, விவரங்களோ, அனைவருக்கும் தெரிந்ததில்லை. திரையுலகில் பணியாற்றும் நடனக் கலைஞர்களுக்கே நம் முந்தைய தலைமுறையின் ஆரம்பத்தில் புகழுடன் பணியாற்றிய நடனக் கலைஞர்களின் விவரங்கள் தெரிவதில்லை. நம் தலைமுறையில் நமக்கு முன் சாதித்து காட்டிய நடனக் கலைஞர்களை அடையாளம் காட்டும் வகையிலும், அவர்களைப் பற்றி வரலாற்றில் பதிவு செய்து, அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் இந்த  டான்ஸ் டான் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் தமிழ் திரையுலகில் புகழுடன் பணியாற்றி மறைந்த நடனக் கலைஞர்கள் பற்றி பதிவு செய்து, அவர்களின் சாதனைகளை  நினைவு கூர்ந்து, அவர்களின் புகழ் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் கவுரவிக்கப்படவுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற முன்னாள் நடன கலைஞர்களும் இவ்விழாவில் கவுரவிக்கப்படவுள்ளனர். மேலும் தமிழகத்தின்  38 மாவட்டங்களில் நடனப்பள்ளி நடத்தி வரும் நடனக் கலைஞர்கள் இவ்விழாவில் கவுரவிக்கப்படவுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com