வைரலாகும் சிரஞ்சீவி-மோகன் ராஜா பட போஸ்டர்

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் காட்ஃபாதர்.இப்படம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்.
வைரலாகும் சிரஞ்சீவி-மோகன் ராஜா பட போஸ்டர்
Published on

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

கடந்த வருடம் நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளையொட்டி இப்படத்திற்கு 'காட்ஃபாதர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காட்ஃபாதர் 
காட்ஃபாதர் 

காட்ஃபாதர் 

இந்நிலையில் 'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை படக்குழு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டரை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com