பரத்தின் 50-வது பட போஸ்டரை வெளியிட்ட திரைப்பிரபலங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பரத்தின் 50-வது திரைப்படத்தின் போஸ்டரை திரைபிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.
பரத்
பரத்
Published on

பாய்ஸ், செல்லமே, காதல், வெயில், ஸ்பைடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பதித்தவர் நடிகர் பரத். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நடுவண் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022-ல் தேர்வானது. பரத்தின் 50-வது படத்தின் பூஜையும் சமீபத்தில் தொடங்கியது. இதனை தயாரிப்பாளர் எஸ்.தாணு தொடங்கி வைத்துள்ளார்.

திரில்லர் கதை அம்சம் கொண்டு உருவாகும் இப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். அவர்களுடன் விவேக் பிரசன்னா, பிக்பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆர்.பி.பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். 

பரத் 50வது படம்

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. பரத்துக்கு 50-வது படம் என்பதால் இதனை கொண்டாடும் விதமாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 50 திரைப்பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மோகன் லால், ஆர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் வெளியிட்ட இப்படத்திற்கு 'லவ்' என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com