திரைப்பிரபலங்கள் வெளியிட்ட அழகிய கண்ணே டிரைலர்

இயக்குனர் ஆர். விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "அழகிய கண்ணே".இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி -சீனுராமசாமி -சசிகுமார்
விஜய் சேதுபதி -சீனுராமசாமி -சசிகுமார்
Published on

இயக்குனர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் "அழகிய கண்ணே". இப்படத்தில் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

மேலும் சிங்கம்புலி, ராஜ்கபூர், காதல் சுகுமார், ஆன்டிருவ்ஸ், அமுதவானன் உள்ளிட்ட பலர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரிக்க என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை விஜய் சேதுபதி, சூரி, சசிகுமார், இயக்குனர் சீனுராமசாமி, யோகி பாபு ஆகியோர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். "அழகிய கண்ணே" திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com