search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் போஸ்டரை வெளியிட்ட அவதார் படக்குழு
    X

    அவதார் 2

    தமிழ் போஸ்டரை வெளியிட்ட அவதார் படக்குழு

    • ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் அவதார் 2.
    • அவதார் 2 படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    2009-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அமைந்திருந்த இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என்ற பெயரில் பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

    அவதார் 2

    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அவதார் 2 படத்தில் டைட்டானிக் பட கதாநாயகி கேட் வின்ஸ்லெட், நவி வீரர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் தமிழ் பதிப்பின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

    இப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×