வெளியானது அதர்வா படத்தின் ரிலீஸ் தேதி

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'.இப்படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
அதர்வா - பிரியா பவானி சங்கர்
அதர்வா - பிரியா பவானி சங்கர்
Published on

'8 தோட்டாக்கள்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'. இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்ததை அடுத்து  சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் 'குருதி ஆட்டம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

குருதி ஆட்டம்

அதன்படி 'குருதி ஆட்டம்' திரைப்படம் ஆகஸ்ட்  5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com